சேவை

Cost records, cost audit

சில நிறுவனங்கள் cost records வைத்திருக்க வேண்டும்; அவற்றில் சில, அந்த records-ஐ practising Cost Accountant மூலம் audit செய்யவும் வேண்டும். உங்கள் நிறுவனத்துக்கு இது பொருந்துமா என்று பொருள் வாரியாக எழுத்துப்பூர்வமாகச் சொல்கிறோம்; பொருந்தினால் records வைக்கிறோம், cost auditor-ஆக நியமிக்கப்பட்டால் audit செய்கிறோம்.

நாங்கள் செய்வது

1. பொருந்துமா?Companies (Cost Records and Audit) Rules, 2014-இன்படி, ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ஆய்வு.
2. Cost recordsForm CRA-1-இல் cost records; audit செய்த நிதி அறிக்கைகளோடு பொருத்திப் பார்த்து.
3. Cost auditCost auditor-ஆக நியமிக்கப்பட்டால், audit-உம் Form CRA-3 அறிக்கையும்.
4. Filing உதவிநிறுவனத்தின் CRA-2 (cost auditor நியமன அறிவிப்பு), CRA-4 filing-க்கான annexure-கள், cost தரவு.

விதிகள் என்ன சொல்கின்றன

  • Cost records: பட்டியலிட்ட தொழிலில் உள்ள நிறுவனத்தின் முந்தைய ஆண்டு மொத்த turnover ₹35 கோடி அல்லது அதற்கு மேல் இருந்தால் cost records வைக்க வேண்டும். Micro, small நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது.
  • Cost audit (ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகள், Table A): மொத்த turnover ₹50 கோடி அல்லது மேல், பட்டியலிட்ட பொருள்/சேவையிலிருந்து ₹25 கோடி அல்லது மேல்.
  • Cost audit (மற்ற துறைகள், Table B): மொத்த turnover ₹100 கோடி அல்லது மேல், பட்டியலிட்ட பொருள்/சேவையிலிருந்து ₹35 கோடி அல்லது மேல்.
  • விலக்கு: 75%-க்கு மேல் வருமானம் ஏற்றுமதியில் அந்நியச் செலாவணியாக வரும் நிறுவனங்கள், SEZ-இல் இயங்கும் நிறுவனங்கள் போன்றவை cost records வைத்தாலும் cost audit தேவையில்லை. இந்த விதிகள் நிறுவனங்களுக்கு (companies) மட்டுமே.

படிவங்களும் தேதிகளும் (31 மார்ச் ஆண்டு முடிவுக்கு)

படிபடிவம்எப்போது
Board, cost auditor-ஐ நியமிக்கிறதுஇல்லைஆண்டு தொடங்கி 180 நாளுக்குள் (27 செப்டம்பருக்குள்)
மத்திய அரசுக்குத் தெரிவித்தல்CRA-2Board கூட்டத்திலிருந்து 30 நாள், அல்லது ஆண்டு தொடங்கி 180 நாள்; இதில் எது முந்தையதோ
Cost auditor, Board-க்கு அறிக்கைCRA-3ஆண்டு முடிந்து 180 நாளுக்குள் (27 செப்டம்பருக்குள்)
நிறுவனம் அறிக்கையை file செய்தல்CRA-4 (XBRL)அறிக்கை கிடைத்து 30 நாளுக்குள்

FY 2025-26-க்கான CRA-4-ஐ கூடுதல் கட்டணம் இல்லாமல் 31 டிசம்பர் 2026 வரை file செய்யலாம் (MCA General Circular 06/2026). விரிவான விளக்கம் (ஆங்கிலத்தில்): Cost audit applicability, படிவங்கள், தேதிகள் →

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Cost audit பொருந்தாவிட்டாலும் Cost Accounting Standards பொருந்துமா?

Cost records தேவைப்படும் இடங்களில் நேரடியாகப் பொருந்தும்; ஏனெனில் Form CRA-1, records-ஐ Cost Accounting Standards, GACAP-படி வைக்கச் சொல்கிறது. கட்டாயமில்லாத இடங்களிலும், செலவை ஒரே மாதிரி அளக்க அவை நல்ல அடிப்படை.

எங்கள் statutory auditor-ஏ cost auditor-ஆக இருக்கலாமா?

இல்லை. நிறுவனத்தின் statutory auditor அதே நிறுவனத்தின் cost auditor-ஆக இருக்க முடியாது. Practising Cost Accountant அல்லது Cost Accountants நிறுவனத்தை Board நியமிக்கிறது.

நாங்கள் MSME. இது பொருந்துமா?

Micro, small நிறுவனங்களுக்கு cost records விதி பொருந்தாது. Medium நிறுவனம் MSME என்பதற்காக மட்டும் விலக்குப் பெறாது; தொழில், turnover-ஐப் பார்க்க வேண்டும்.

எங்களிடம் பேசுங்கள்

எண் 13, திருவள்ளுவர் தெரு, திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு 632508

திங்கள் முதல் சனி, காலை 10 முதல் மாலை 6 வரை. அலுவலகத்தில் சந்திக்கலாம், அல்லது போன், WhatsApp, இமெயில் மூலம் வேலை செய்யலாம்.

This page in English → · எல்லாச் சேவைகளும் →