பின்னால்

மாதாந்திரக் கணக்கு: சிறு தொழிலுக்கு ஒரு checklist

இந்தப் பக்கத்தில்

மாதக் கணக்கை முடிக்க என்னென்ன பதிவுகள் தேவை?

வங்கி, விற்பனை, கொள்முதல், செலவுகள், stock, வாடிக்கையாளர்–சப்ளையர் நிலுவைகள்: இவற்றின் பதிவுகளைத் தயாராக வையுங்கள். ஒரே மாதத்தின் பதிவுகளை ஒப்பிட்டு, விட்டுப்போன ஆவணங்களையும் திருத்த வேண்டிய பதிவுகளையும் பட்டியலிடுங்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பொறுப்பாளர், ஒரு தேதி குறியுங்கள்.

ஒவ்வொரு மாதமும் சேர்த்து வைக்க வேண்டியவை

  • விற்பனை, கொள்முதல் invoices; debit notes, credit notes.
  • தொழிலின் எல்லா வங்கிக் கணக்குகள், cash book, செலவு bills.
  • வாடிக்கையாளர், சப்ளையர் நிலுவைகள், advance விவரங்கள்.
  • Stock வரவு, வெளியே போனது, மாத இறுதி இருப்பு.
  • சம்பளம், கடன் வட்டி, EMI, இயந்திரம் போன்ற fixed assets வாங்கியது.
  • அந்த மாதத்தின் வரி filings, கட்டியதற்கான challans.

முடிப்பதற்கு முன் சரிபாருங்கள்

Bank reconciliation செய்யுங்கள். சொந்தச் செலவுகளையும் தொழில் செலவுகளையும் பிரியுங்கள். Advance, கடன், செலவுகளைச் சரியான கணக்குத் தலைப்புகளில் போடுங்கள். விட்டுப்போன ஆவணங்களையும் தீராத வேறுபாடுகளையும் பட்டியலிடுங்கள்.

அறிக்கையில் என்ன இருக்கும்?

ஒப்புக்கொண்ட வேலையைப் பொறுத்து: P&L, நிலுவைப் பட்டியல், bank reconciliation, இன்னும் தீர்க்க வேண்டியவற்றின் பட்டியல். அறிக்கையின் தேதி, எந்தப் பதிவுகளை வைத்துச் செய்தது, எந்தச் சரிபார்ப்பு இன்னும் முடியவில்லை என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

முதல் முறை எழுதும்போது உங்கள் தொழில், பயன்படுத்தும் accounting software, உங்கள் தேவை: இவ்வளவு போதும். Password, OTP, ரகசிய ஆவணங்களைப் படிவத்தில் அனுப்ப வேண்டாம்.

தொடர்புடைய உதவி, ஆதாரங்கள்

இது பொதுவான விளக்கம் மட்டுமே; உங்கள் தொழிலின் உண்மையான பதிவுகளையும் பொருந்தும் விதிகளையும் வைத்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்.

உங்கள் தேவையைச் சொல்லுங்கள்

எல்லாத் தமிழ் வழிகாட்டிகளும் →

வங்கி இருப்பு ஏன் பொருந்தவில்லை?

புத்தகத்தில் ₹24,500. பதியாத வங்கிக் கட்டணம் ₹500-ஐக் கழித்தால் ₹24,000. Bank statement-இல் ₹29,000; புத்தகத்தில் பதிந்தும் இன்னும் வங்கியில் clear ஆகாத cheque ₹5,000-ஐக் கழித்தால் ₹24,000.

அடுத்து சரிபார்க்க வேண்டியது

வங்கிக் கட்டணத்தைப் பதியுங்கள். Cheque-ஐ இரண்டாவது முறை பதிய வேண்டாம். வேறு வேறுபாடுகள் இல்லை என்று எடுத்துக்கொண்ட எளிய உதாரணம் இது.

இது புரிந்துகொள்ள ஒரு கற்பனை உதாரணம்; உங்கள் தொழிலின் உண்மையான பதிவுகளையும் விதிகளையும் தனியாகச் சரிபார்க்க வேண்டும்.

வாராந்திர cash plan (ஆங்கிலத்தில்)