இந்தப் பக்கத்தில்
பூவராகவன் & கோ-வை நீங்கள் தொடர்புகொண்டால், முதல் செய்தியிலிருந்து வேலை தொடங்கும் வரை என்ன நடக்கும் என்பது இங்கே.
1. நீங்கள் தொடர்புகொள்ளும்போது
WhatsApp, போன், இமெயில், அல்லது இந்தத் தளத்தில் உள்ள படிவம் மூலம் தொடர்புகொள்ளலாம். அலுவலக நேரம் திங்கள் முதல் சனி வரை, காலை 10:00 முதல் மாலை 6:00 வரை. பொதுவாக ஒரு வேலை நாளுக்குள் பதில் சொல்கிறோம். அலுவலக நேரத்துக்குப் பிறகு வரும் செய்திகளை அடுத்த வேலை நாள் காலையில் படிப்போம்.
இப்போதைக்கு, உங்களுக்கு என்ன தேவை என்று சுருக்கமாகச் சொன்னால் போதும். முதல் செய்தியில் நிதி அறிக்கைகள், PAN, ஆதார், வங்கி விவரங்கள், passwords எதையும் அனுப்ப வேண்டாம்.
2. முதல் உரையாடல்
உங்கள் தொழில், உங்களுக்கு என்ன தேவை, எப்போதுக்குள் தேவை, என்ன பதிவுகள் கையில் உள்ளன என்று கேட்போம். உங்கள் தேவையைப் புரிந்துகொள்வதும், அது நாங்கள் செய்யும் வேலைக்குள் வருமா என்று பார்ப்பதும்தான் நோக்கம். வராவிட்டால் அதையும் நேரடியாகச் சொல்வோம்.
3. வேலையின் வரம்பு, engagement letter
எந்த வேலையும் தொடங்குவதற்கு முன், என்ன வேலை (scope), என்ன தருவோம் (deliverables), எப்போதுக்குள், யாருக்கு என்ன பொறுப்பு, கட்டணம் எவ்வளவு என்று ஒரு engagement letter-இல் எழுத்தில் ஒப்புக்கொள்வோம். நீங்கள் உறுதி செய்த பிறகுதான் வேலை தொடங்கும். பிறகு வேலையின் வரம்பு மாறினால், அந்த மாற்றத்தையும் எழுத்தில் ஒப்புக்கொள்வோம்.
4. தகவல்களும் ஆவணங்களும்
வேலை ஒப்புக்கொண்டதும், எங்களுக்குத் தேவையான பதிவுகளின் பட்டியலை அனுப்புவோம். ஆவணங்களைப் பாதுகாப்பாக அனுப்ப ஒரு வழியையும் சேர்ந்து முடிவு செய்வோம். அப்படி ஒப்புக்கொண்டிருந்தால் தவிர, WhatsApp-இலோ சாதாரண இமெயிலிலோ ஆவணங்களை அனுப்ப வேண்டாம்.
5. ரகசியத்தன்மை
நீங்கள் சொல்லும் தகவல்கள் ரகசியமாக இருக்கும். Cost Accountants Act, 1959, ICMAI-இன் Code of Ethics இரண்டின்படியும் இது practice செய்யும் Cost Accountants-இன் கடமை. உங்கள் வேலையைச் செய்பவர்களிடம் மட்டும், அல்லது சட்டம் கேட்கும் இடத்தில் மட்டும், அவை பகிரப்படும். தனிப்பட்ட data-வை எப்படிக் கையாள்கிறோம் என்பதை எங்கள் Privacy policy (ஆங்கிலத்தில்) விளக்குகிறது.
6. Independence (நடுநிலை)
நாங்கள் உங்கள் cost auditor-ஆக இருந்தால், உங்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய வேறு சில வேலைகளைத் தொழில் விதிகள் கட்டுப்படுத்துகின்றன. அப்படிப் பொருந்தினால் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவோம்.
7. வேலை நடக்கும்போது
நிறுவன உரிமையாளர் CMA இர. பூவராகவன் (CMA Boovaraghavan R.) அவர்களோடு நேரடியாகப் பேசுவீர்கள். Engagement letter-இல் ஒப்புக்கொண்ட அட்டவணைப்படி வேலை எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வோம். உங்களிடம் தருவதற்கு முன், ஒவ்வொரு finding-ஐயும் அறிக்கையையும் உரிமையாளர் பார்த்துச் சரிபார்ப்பார்.
8. பாதுகாப்பாக இருங்கள்
நாங்கள் +91 70100 11800 என்ற எண்ணிலிருந்தும் office@boovaraghavanandco.in என்ற இமெயிலிலிருந்தும் மட்டுமே தொடர்புகொள்கிறோம். OTP, passwords எதையும் ஒருபோதும் கேட்க மாட்டோம். வேறு எண்ணிலிருந்தோ இமெயிலிலிருந்தோ "நாங்கள்" என்று செய்தி வந்தால், பதில் சொல்லும் முன் எங்களிடம் உறுதி செய்துகொள்ளுங்கள்.
9. எங்கள் பதிவைச் சரிபாருங்கள்
Boovaraghavan & Co. இந்திய செலவுக் கணக்காளர் நிறுவனத்தில் (ICMAI) Firm Registration Number (FRN) 007425-இல் பதிவு பெற்றது. உரிமையாளரின் ICMAI membership எண் 56998. நிறுவனப் பதிவை இங்கே சரிபார்க்கலாம்: ICMAI நிறுவனப் பட்டியல் ↗. உறுப்பினர் பதிவை இங்கே சரிபார்க்கலாம்: ICMAI உறுப்பினர் தேடல் ↗.
10. கேள்விகள் அல்லது குறைகள்
ஏதாவது நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால், office@boovaraghavanandco.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள், அல்லது +91 70100 11800-இல் அழையுங்கள். உங்கள் புகார் கிடைத்ததை 48 மணி நேரத்துக்குள் உறுதி செய்வோம்.